×

திருப்பனந்தாள், திருவிடைமருதூர், குடந்தையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

தஞ்சை, டிச. 22: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம் ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலைதூரங்களில் இருந்து வந்து அடையாள அட்டை பெறாதவர்களுக்காக ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்கவுள்ளனர்.

இச்சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை (23ம் தேதி) திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் நடுநிலைப்பள்ளியில் வரும் 26ம் தேதி, கும்பகோணம் கே.எம்.எஸ்.வளாகத்தில் வரும் 30ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடக்கிறது. எனவே திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டுமே குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து பங்கேற்று பயன்பெறலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் சென்று அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Camp ,Thiruppanandal ,Kuttandai ,Thiruvidaimarudur ,
× RELATED சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்